இயக்குனர் செல்வராகவன் தனது இரண்டாவது மனைவியையும் பிரியப் போகிறாரா?… அவரே வெளியிட்ட ட்வீட்!… ஷாக்கான ரசிகர்கள்!…

இயக்குனர் செல்வராகவன் தனது இரண்டாவது மனைவியையும் பிரியப் போகிறாரா?… அவரே வெளியிட்ட ட்வீட்!… ஷாக்கான ரசிகர்கள்!…

இயக்குனர் செல்வராகவனின் சமீபத்திய twitter பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. இயக்குனர் செல்வராகவன் பிரபல நடிகர் தனுஷின் அண்ணனும் ஆவார்.

இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இயக்குனராக மட்டுமின்றி தற்பொழுது நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தற்பொழுது இவர் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை சோனியா அகர்வால் காதல் திருமணம் செய்து அவரை விவாகரத்து செய்தார். இதை தொடர்ந்து அவர் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது மூன்று குழந்தைக்கு தந்தையாக உள்ளார். சமீபத்தில் இவர் கிறிஸ்துமஸ் கொண்டாடி தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து தற்பொழுது திடீரென அவர் துணை குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்று இணையத்தில் படுவைரலாகி  வருகிறது.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, .”தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” என்று கூறியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இயக்குனர் செல்வராகவன் தனது இரண்டாவது மனைவியையும் பிரியப் போகிறாரா? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த ட்விட்டர் பதிவு….

Begam