நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?… அம்மாடி!… தலையே சுத்துதே!…

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா?… அம்மாடி!… தலையே சுத்துதே!…

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்து விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது  திரை பயணத்தை தொடங்கினார். இவர் திரையுலகில் ‘மெரினா’ திரைப்படம் மூலம் கால் பதித்தார். இதை தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து அவர் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களுக்கு என ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ்.இத்திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதை தொடர்ந்து தற்பொழுது இவர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். படத்திற்கு பின்னர் கமலஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகி உள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் தில் ராஜு ‘வாரிசு’ திரைப்படத்திற்கு பிறகு மற்றொரு புதிய தமிழ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் குறித்து விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூபாய் 27 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்று இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் 35 கோடி முதல் 40 கோடி வரை கேட்டாராம். ஆனால் இறுதியில் 27 கோடி உறுதி செய்யப்பட்டு அவர் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Begam