“நெருங்கி வாருங்கள்.. நேருக்கு நேர் பார்ப்போம்…” அமெரிக்காவை அதிர வைத்த ஈரானின் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on பங்குனி 31, 2026

Spread the love

மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேலுடன் கைகோர்த்து அமெரிக்கா நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்கள், தற்போது தரைவழிப் போராக மாறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவைக் கைப்பற்றப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவம் அங்கு வீரர்களைக் குவித்து வருகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் புரட்சிகர காவலர் படை ஒரு அதிரடி வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் தங்கள் நாட்டு கமாண்டோக்கள் போருக்குத் தயாராக இருப்பதைச் சுட்டிக்காட்டி, தரைவழித் தாக்குதல் நடத்த வந்தால் அமெரிக்க வீரர்களை வீழ்த்தக் காத்திருப்பதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

பென்டகன் எனப்படும் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகம், ஈரான் மீது நேரடித் தரைவழித் தாக்குதல் நடத்துவது குறித்து ரகசியத் திட்டங்களை வகுத்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. இதனைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளத் துடிக்கும் ஈரான், “அருகில் வாருங்கள், நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்ற வாசகத்துடன் போர் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகளைப் பகிர்ந்துள்ளது. இந்தத் துணிச்சலான நடவடிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.