தனது அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்து கூறி பதிவை வெளியிட்ட இந்திரஜா சங்கர்… ஐ லவ் யூ சோ மச் சண்டக்காரி…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் காமெடி வேடங்கள் ஏற்று நடித்த பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.  நடிகர் ரோபோ சங்கர் பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

   

நடிகர் ரோபோசங்கர் தற்பொழுது உடல் எடை குறைந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வந்தது. சமீபத்தில் கூட அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோபோசங்கர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிந்திருந்தார்.

நடிகர் ரோபோசங்கரின் மகளான இந்திரஜா சங்கர் தற்பொழுது சினிமா துறையில் கால் பதித்து கலக்கி வருகிறார். இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்த பாண்டியம்மா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து விருமன்  திரைப்படத்தில், நடிகை அதிதி சங்கருக்கு தோழியாக நடித்து அசத்தியுள்ளார்.

இப்படி துணை கதாபாத்திரங்களை ஏற்று தற்போது திரையுலகில் கலக்கி வருகிறார் நடிகை இந்திரஜா சங்கர். சமூக வலைத்தளங்களிலும் எப்பொழுதும் அடிவாக இருக்கக்கூடிய இவர், தற்பொழுது தனது அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வைரல் பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by INDRAJA SANKAR (@indraja_sankar17)