இதுவரை ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தியர்கள் யார் யார் தெரியுமா..? இதோ முழு விவரம்….

By Archana

Published on:

பல்வேறு துறைகளை சேர்ந்த திரைப்படத்துறையில் உள்ள கலைஞர்களின் கலை மற்றும் தொழில்நுட்ப தகுதியை அங்கீகரிக்கும் நோக்கத்தில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று தான் ஆஸ்கர் விருது. அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஒவ்வொரு வருடமும் இந்த விருதை வழங்கி வருகிறது. முதன் முதலில் 1967 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் தொடங்கப்பட்டது.

   

திரை துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு இது முக்கியமான விருதாகும். இந்த விருது மூலமாக உலக அளவில் சிறந்த திறமையாளர்களை அங்கீகரித்து அதன் பிறகு சிறந்த வேலை வாய்ப்பு, ஊதிய உயர்வு மற்றும் உலகளாவிய ஊடக அங்கீகாரம் ஆகியவை வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். தற்போது இதுவரை ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தியர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்களை இதில் பார்க்கலாம்.

பானு அத்தையா:

இந்தியாவில் முதல் ஆஸ்கர் விருது பெற்ற நபர் இவர்தான். பிரபல ஆடை வடிவமைப்பாளரான இவர் கடந்த 1982 ஆம் ஆண்டு காந்தி என்ற வரலாற்று திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றார். இவர் பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் உள்ள பல பிரபலங்களுக்கு சிறப்பாக ஆடை வடிவமைத்துள்ளார்.

சத்யஜித்ரே:

இந்திய சினிமாவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாராட்டப்பட்ட ஒருவர்தான் இவர். உலகில் திரைப்படம் எடுக்கும் மாணவர்களால் அவரின் படைப்புகள் கேஸ் ஸ்டடிகளாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இவர் இந்திய மற்றும் பெங்காளி சினிமாவிற்கு நிறைய பங்களிப்புகளை தந்துள்ளார். இவரின் முதல் திட்டமான பதேர் பாஞ்சாலி கடந்த 1955 ஆம் ஆண்டு திரைப்பட விழாவில் சிறந்த மனித ஆவணம் உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச பாராட்டுகளை பெற்றது. பிறகு 1992 ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ரசூல் பூக்குட்டி:

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி 81 வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒலிக்கலவை காண விருதை வென்றார்.

ஏ ஆர் ரகுமான்:

டேனி பாயிலின் ஸ்லம்டாக் மில்லியனர் பல பிரிவுகளின் 81 வது ஆஸ்கர் விருதுகளில் பல விருதுகளை வென்று குவித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். பிரிட்டிஷ் மற்றும் இந்திய திரைப்படத்தில் சிறப்பாக இசையமைத்ததற்காக ஏ ஆர் ரகுமான் ஆஸ்கார் விருதுகளில் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். இவருக்கு இசைக்காக ஒரு விருதும் மற்றும் ஜெய் ஹோ பாடலுக்காக மற்றொரு விரதம் வழங்கப்பட்டது.

குல்சார்:

இந்தியாவின் சிறப்பான பாடல்களில் ஒன்றாக கருதப்படும் ஜெய் ஹோ பாடல் 81 வது அகாடமி விருதுகளில் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வென்றது. மேலும் உலக அளவில் பிரபலமான இந்த பாடலுக்கு வரிகளை அமைத்துக் கொடுத்த பாடல் ஆசிரியர் குல்சார் ஆஸ்கார் விருதை வென்றார்.

கார்த்தி கி கோன்சால்வ்ஸ், குநீத் மோங்கோ:

இவர்கள் இருவரின் குறும்படமான தி எலிபன்ட் விஸ்பர்ஸ் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த டாக்குமென்டரி குறும்பட வகை காண ஆஸ்கார் விருதை வென்றது. இந்த விருதைப் பெற்று ஆஸ்கார் விருதுகளை வென்ற முதல் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

ஆர் ஆர் ஆர் திரைப்படம் நாட்டு நாட்டு பாடல்:

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. இந்தப் பாடல் கீரவாணையால் இசையமைக்கப்பட்டது. இதற்கு பாடல் வரிகளை எழுதியவர் சந்திர போஸ்.

author avatar
Archana