டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…! இந்திய ரயில்வேயில் 3,548 மெகா காலி பணியிடங்கள் அறிவிப்பு… மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க…!!

By Devi Ramu on ஐப்பசி 12, 2026

Spread the love

இந்திய ரயில்வே துறையில் வேலை தேடும் பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு மாபெரும் வாய்ப்பை வழங்கும் வகையில், ரயில்வே தேர்வு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளின் கீழ் மொத்தம் 3,548 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பின் மூலம் தலைமை வர்த்தக – பயணச்சீட்டு மேற்பார்வையாளர், சரக்கு ரயில் மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் மூத்த எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இதில் அதிகபட்சமாக சரக்கு ரயில் மேலாளர் பணிக்கு 2,750 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 8 முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையவழி விண்ணப்ப நடைமுறைக்கு, தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற நவம்பர் 6-ஆம் தேதி இரவு 11:59 மணி வரை https://www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.