உங்களுக்கு இந்த 3 அறிகுறி இருக்கா?… அப்போ மாரடைப்பு வருவது உறுதி… மருத்துவர்கள் கொடுக்கும் எச்சரிக்கை…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

இன்றைய காலத்தில் வயது வேறுபாடுகள் இல்லாமல் உலக அளவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தம் தான். ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணி நேரங்கள் வேலை செய்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதிய தூக்கம் இன்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.

உயர் ரத்த அழுத்தத்தில் முக்கிய அறிகுறிகள் நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகள் போலவே இருப்பதன் காரணமாக யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அளவுக்கு அபாயம் ஏற்படும். எனவே உயர் ரத்த அழுத்தத்தில் எந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

பொதுவாகவே காலையில் தூக்கத்தில் இருந்து எழும்போதே தலைவலியை உணர்ந்தால் நிச்சயம் அது ஆபத்தான. அதிகாலையில் ஏற்படும் தலைவலியானது அதிக மன அழுத்தம் அல்லது போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்படும். உயர் ரத்த அழுத்தம் இருந்தாலும் இப்படியான தலைவலியை சந்திக்க கூடும். அதனை கண்டு கொள்ளாமல் விடுவது உயிர் ஆபத்தை ஏற்படுத்தும். இந்த வகையான தலைவலியை காலையில் எழுந்ததும் தலையின் பின்புறத்தில் ஏற்படும். தூக்கத்தில் போது அல்லது அதிகாலையில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது மண்டை ஓட்டில் அழுத்தம் அதிகரிக்கின்றது. அதனால் தலை வலி ஏற்படும். எனவே காலையில் அடிக்கடி தலைவலி வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

   

அடுத்ததாக பார்வையில் ஏற்படும் மாற்றங்களும் உயர் ரத்த அழுத்தத்தில் முக்கிய எச்சரிக்கை அறிகுறி என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது அது கண்களில் உள்ள சிறிய ரத்த குழாய்களை கடினப்படுத்தி உயர் ரத்த அழுத்த ரெட்டினோபதியின் நிலைக்கு உள்ளாக்கும். அதனால் பார்வை மங்கலாக தெரிவது அல்லது தெளிவு இல்லாமல் இரண்டாகத் தெரிவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தினம்தோறும் கணினி திரையை பார்த்தபடி அதிக நேரம் பணியாற்றுபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுவதால் அதனை சாதாரணமாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த பிரச்சினையை தொடர்ந்து அனுபவித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

 

இறுதியாக மிகுந்த உடல் சோர்வை உணர்ந்தால் அது உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளை மற்றும் இதயத்திற்கு போதுமான ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் கிடைக்காததன் விளைவாக இருக்கக்கூடும். எனவே நல்ல தூக்கத்தை அனுபவித்த பின்னரும் ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால் உடனே மருத்துவர் அணுகி ஆலோசனை பெற வேண்டும். இதனை புறக்கணிப்பதால் மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.