ஒரு பெண் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் அவளுக்குத் தெரியாமல் அமைதியாகத் தொடர்ந்து வந்தான். சில நொடிகளில், சரியான வாய்ப்பைப் பார்த்து அவளது கைப்பையைக் கைபற்றிவிட்டுத் தப்பி ஓடிவிட்டான். இந்த முழு சம்பவமும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலையில் நடந்து செல்லும்போது எப்போதும் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். யாராவது உங்களைப் பின்தொடர்வதை உணர்ந்தால், உடனடியாக ஆட்கள் நடமாட்டம் உள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் அல்லது அருகில் உள்ளவர்களிடம் உதவி கேளுங்கள்.
https://twitter.com/RoyalCheckOut/status/2083499260969169226/video/1
உங்கள் கைப்பை, கைப்பேசி மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பகுதிகளில் தனியாகச் செல்லும்போது, சிறு சந்தேகத்திற்குரிய நடவடிக்கையைக் கூட அலட்சியப்படுத்தாமல் எச்சரிக்கையாக இருங்கள். சிறிய விழிப்புணர்வு கூட பெரிய அசம்பாவிதத்தைத் தடுக்கும்!
