விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன் நுழையப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக் பாஸ்.’ இந்நிகழ்ச்சியில் 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று 6வது சீசன் ஒளிபரப்பப்பட உள்ளது. இப்போட்டியில் மொத்தம் 20 போட்டியாளர்கள் பங்கு பெறுகின்றனர் என்று கூறப்படுகிறது. இவர்களில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்காக நேற்றே போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு விட்டார்கள். இன்று தான் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் எனினும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் அடிக்கடி வெளியாகிய நிலையில், தற்போது உறுதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் அவர் தன் அண்ணனுடன் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் அண்ணன் இப்பொழுது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பங்கு பெற்றுள்ளார். நான் அவரை செல்லமாக புஜ்ஜி என்று தான் சொல்வேன்.
அவர் எனக்கு அண்ணன் மட்டும் இல்லை சகோதரன், நண்பன், அப்பா எல்லாமே அவர்தான் எனக்கு. கண்டிப்பாக அவரை சில நாட்கள் மிஸ் பண்ண போறேன். நான் உனக்கு சொல்ல விரும்புவது ஒன்னே ஒன்னு தான் அது என்னோட வாழ்த்துக்கள் மட்டும்தான்.
இந்த பிக் பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி அவன் கண்டிப்பா வெற்றியாளரா திரும்பி வரணும். இந்த வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி. என் அண்ணனுக்கு உங்களுடைய ஆதரவை அளியுங்கள்’ என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் வைரலாகும் அந்த பதிவு இதோ…
View this post on Instagram