Connect with us

ஒரு KeyBoard-ஆல் வந்த பிரச்சனை.. இளையராஜா – AR.ரகுமான் பிரிவுக்கு இது தான் காரணமா..? உண்மையை உடைத்த இசை கலைஞர்..

TRENDING

ஒரு KeyBoard-ஆல் வந்த பிரச்சனை.. இளையராஜா – AR.ரகுமான் பிரிவுக்கு இது தான் காரணமா..? உண்மையை உடைத்த இசை கலைஞர்..

 

இன்றைய இசையுலகில், இந்திய சினிமாத்துறையில் ஏஆர் ரகுமான் மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். அவர் தனது படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று நடிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தவம் கிடக்கும் அளவுக்கு உலகின் முன்னணி இசையமைப்பாளர்களின் ஒருவராக அவர் இருக்கிறார் என்றால் அது மிகையல்ல. மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலமாக தான் ஏஆர் ரகுமான் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார். இன்று இந்திய அளவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக மதிக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது பெற்ற நாயகனாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் மறக்குமா நெஞ்சம் என்ற அவரது இசை நிகழ்ச்சியை ஏற்பாட்டாளர்கள் சொதப்பியதால், அவருக்கும் அவப் பெயர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

   

இசையமைப்பாளராக தன் வாழ்க்கையை துவக்கிய போது ஏஆர் ரகுமான் பெயர் திலீப். பிறகுதான் அவர் ஏஆர் ரகுமான். திலீப் என்ற இளம்வயதில் இருந்த காலகட்டத்தில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், டி ராஜேந்தர் போன்றவர்களிடம் உதவியாளராக திலீப் பணிசெய்து இருக்கிறார். இதை அவரே ஒரு மேடையில் வெளிப்படையாக கூறி, என்னிடம் இருந்த கூச்ச சுபாவம், வெட்கம் போன்றவற்றை விரட்டி மற்றவர்களிடம் சகஜமாக பேசப் பழகியது டி. ராஜேந்தரிடம் பணிபுரிந்த போதுதான் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், இசைக்கலைஞர்களில் ஒருவராக சங்கர் என்பவர், ஏஆர் ரகுமான், இளையராஜா குறித்து பேசி இருக்கிறார். அவர் கூறுகையில், ஏஆர் ரகுமான், திலீப் ஆக இருந்த போது சிறிய வயதில் இளையராஜாவிடம் கீ போர்டு வாசிப்பாளராக, உதவியாளராக பணிசெய்தார். அப்போது வெளிநாட்டில் இருந்து அவர், கீபோர்டு அட்டாச்டு வரவழைத்தார். அப்போது அது விமானநிலையத்தில் இருந்தது. அதை வாங்க வேண்டுமெனில் அதற்கு ஒரு பெரிய தொகை செலுத்த வேண்டியிருந்தது. அதை சொல்லி, கொஞ்சம் பணம் குறைத்து வாங்கி தருமாறு இளையராஜாவிடம் கேட்டார்.

ஏனெனில் இளையராஜா செல்வாக்கானவர் என்பதால். ஆனால், இந்த வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே, நான் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அந்த உதவியை செய்ய மறுத்ததால் அதன்பின் இளையராஜாவை விட்டு திலீப் விலகிவிட்டார். இளையராஜா எப்போதுமே அதிக கெத்து காட்டுவார். இந்த விஷயத்திலும் அப்படித்தான் நடந்துக்கொண்டார் என, மியூசியன் சங்கர் என்பவர் அதில் கூறியிருக்கிறார்.

author avatar
Sumathi
Continue Reading
To Top