இதயம் உடைந்தது.. தங்கை பவதாரணியுடன் எடுத்த கடைசி புகைப்படத்தை பகிர்ந்த இயக்குனர் வெங்கட்பிரபு..

By Mahalakshmi

Published on:

மறைந்த திரைப்பட பின்னணி பாடகி  பவதாரணி, இவருடன் இருக்கும் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு மிகுந்த வருத்தத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதில் பவதாரணியுடன் இறுதியாக எடுத்த புகைப்படங்கள் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

   

இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளான திரைப்பட பின்னணி பாடகி பவதாரணி 5 மாதமாக புற்றுநோயால் அவதிப்பட்டு  இருந்த நிலையில் ஆயுர்வேத சிகிச்சை பலனின்றி கடந்த 24 ஆம் தேதி உயிரிழந்தார். இவரின் இறப்பு இளையராஜா குடும்பத்தினருக்கும்; உறவினர்களுக்கும்; திரை பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.

மேலும், இளையராஜாவின் மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரை பிரபலங்கள் அனைவரும் ஒன்று திரண்டு இளையராஜாவின் வீட்டிற்கு வந்து தங்கள் இரங்கலை தெரிவித்து வந்துள்ளார்கள். பவத்தரணியின் உடல் அவரது பண்ணை வீட்டில் இளையராஜாவின்  தாய், மனைவி பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியாகின.

இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகனான இயக்குனர் வெங்கட் பிரபு தங்கை பவதாரணி உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதில்  பவதாரணி உடன் கடைசியாக  எடுத்த புகைப்படங்கள் என்று பார்ட்டியில் அவளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதை பார்ப்பவர் நெஞ்சங்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

author avatar
Mahalakshmi