இந்த இரண்டு மட்டும் கிடைச்சால் போதும்!…. தளபதி விஜயின் வைரல் குட்டி ஸ்டோரி!… இதோ!…

இந்த இரண்டு மட்டும் கிடைச்சால் போதும்!…. தளபதி விஜயின் வைரல் குட்டி ஸ்டோரி!… இதோ!…

நடிகர் விஜய் தனது வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் கூறிய ஒரு குட்டி ஸ்டோரி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் வாரிசு. இத்திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்திற்கான பிரமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்நிலையில் சூப்பரான குட்டி ஸ்டோரியில் வாழ்க்கை தத்துவம் ஒன்றை கூறியுள்ளார் தளபதி விஜய். அந்த குட்டி ஸ்டோரி என்னென்ன உங்களுக்கு தெரியுமா?

இதோ அந்த குட்டி ஸ்டோரி….

‘ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என நான்கு பேர் இருந்தனர். அப்பா தினமும் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது இரண்டு சாக்லேட் வாங்கி வருவார். தங்கை அந்த சாக்லேட்டை சாப்பிட்டுவிடுவார். ஆனால் அண்ணன் அது நாளைக்கு பள்ளிக்கு எடுத்து செல்லலாம் என நினைத்து ஒரு இடத்தில் அதை ஒளித்து வைப்பார். அதையும் தங்கை சற்று நேரத்தில் எடுத்து சாப்பிட்டுவிடுவாள்.

அன்பு என்றால் என்ன என ஒரு நாள் தங்கை அண்ணனிடம் கேட்க, ‘உன்னோட சாக்லேட்டை நீ சாப்பிடுற, நான் மறைத்து வைக்கும் சாக்லேட்டை எடுத்து சாப்பிட்டுடுற. நீ எடுப்பனு தெரிஞ்சும் அதே இடத்தில டெய்லி உன் அண்ணன் சாக்லேட் வைக்குறான்ல.. அது தான் அன்பு என சொன்னாராம்’.

அன்பு மட்டுமே இந்த உலகத்தையே ஜெயிக்க கூடிய மிகப்பெரிய ஆயுதம். நமக்காக எதையும் விட்டுக்கொடுக்கக்கூடிய நமது உறவுகள், எதுக்காகவும் நம்மை விட்டுக்கொடுக்காத நண்பர்கள்.. இந்த இரண்டு அன்பு இருந்துவிட்டாலே எல்லாம் முடிந்தது. இவ்வாறு கூறி தனது உரையை முடித்துள்ளார் விஜய்

Begam