புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கே. கிருஷ்ணசாமி தற்போதைய தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து காரசாரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். நாகரிகத்திற்கு உதாரணமாக விளங்கிய தமிழக அரசியல், இன்று கேலிக்கூத்தாக மாறியுள்ளதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். எந்த ஒரு அரசியல்வாதியும் தகுந்த கொள்கை கோட்பாட்டோடு செயல்படுவதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “பதவி இல்லை என்றால் உயிரா போகப் போகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தற்போதைய அரசியல்வாதிகள் பதவிக்காக மட்டுமே அலைகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
