நான் அந்த நடிகரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்… அடுத்த ஜென்மத்திலயாவது…புதிய சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா…

By Meena on செப்டம்பர் 30, 2024

Spread the love

சுசித்ரா இந்திய ரேடியோ ஜாக்கி, பிரபல பின்னணி பாடகி, பாடல் ஆசிரியர், குரல் கலைஞர், டப்பிங் கலைஞர் மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பாடல்களை பாடி உள்ளார்.

   

கல்லூரி படிப்பை முடித்த பின்பு சுசித்ரா ரேடியோ மிர்ச்சியில் சேர்ந்தார். சில வருடங்கள் ஆர்ஜேவாக பணிபுரிந்த பின்பு பாட ஆரம்பித்தார் சுசித்ரா. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த லேசா லேசா என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியதன் மூலம் பாடசியாக தனது பயணத்தை ஆரம்பித்தார் சுசித்ரா.

   

பிறகு பல வெற்றி திரைப்படங்களில் பாடல்களை பாடிக்கிறார் சுசித்ரா. 2016க்கு பிறகு சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் இவர் நடிகர் நடிகைகளின் இன்னொரு பக்கத்தை வெளிப்படையாக போட்டு காட்டியதன் மூலம் பிரபலமாகவும் பல சர்ச்சைக்கும் உள்ளானார் சுசித்ரா.

 

அன்றிலிருந்து இன்று வரை புதுப்புது சர்ச்சையாக கிளப்பும் வகையில் பல தகவல்களை கூறி வருகிறார் சுசித்ரா. அதில் சில உண்மை இருந்தாலும் சிலர் பொய்யாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். அதன் வரிசையில் தற்போது சுசித்ரா ஒரு விஷயத்தை ஓபன் ஆக கூறியிருக்கிறார்.

து என்னவென்றால் ஆயுத எழுத்து படம் வந்த நேரத்தில் நான் சூர்யாவை மிகவும் காதலித்தேன். அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதை என் பாட்டியிடம் கூறினேன். அவரிடம் கூறி அவர்கள் வீட்டில் போய் மாப்பிள்ளை கேளுங்கள் என்று சொன்னேன். என் பாட்டி தான் நமக்குனு யார் இருக்கா நம்ம ரெண்டு பேரு தான் இருக்கோம்.

அவங்க பெரிய சினிமா குடும்பம் நாம போய் கேட்டா செருப்பால் அடிச்சு அனுப்பிடுவாங்க அப்படின்னு என் பாட்டி சொல்லிட்டாங்க. உடனே ஒரு நாள் நைட் ஃபுல்லா தூங்காம அழுது என்னோட பீலிங்க்ஸ நான் அதோட க்ளோஸ் பண்ணிட்டேன் என்று பனாக பேசி புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் சுசித்ரா.