ஜன்னல் வழியா வந்த கொடூரம்….. நர்ஸ் கதற கதற பலாத்காரம்… கொலை பண்ணிட்டு போய் நிம்மதியா தூங்கியிருக்கான்…. ஹைதராபாத் போலீசாரையே உரையவைத்த கொடூரனின் சைக்கோத்தனம்….!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பஹாடிஷரீஃப் பகுதியில், பணி நிமித்தமாக தங்கியிருந்த 24 வயது செவிலியர் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் ஹைதராபாத்திற்கு வந்து தனியார் மருத்துவமனையில் பணியில் சேர்ந்த அந்தப் பெண், தனியாக அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். இந்தச் சூழலில், சம்பவத்தன்று அவரது நண்பர் நீண்ட நேரமாகக் போன் செய்தும் பதிலளிக்காததால், சந்தேகமடைந்து நேரில் வந்து பார்த்தபோது, அப்பெண் அறையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

   

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பைக் மெக்கானிக் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர், 2023-ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்துள்ளான். பாதிக்கப்பட்ட செவிலியர் தங்கியிருந்த அறையின் பின்புற ஜன்னல் வழியே, கடந்த ஒரு மாதமாக அவரது நடமாட்டங்களைக் தொடர்ந்து கண்காணித்து திட்டமிட்டே இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த அந்த நபர், ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளான். அதற்கு அப்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளான். பின்னர், அப்பெண் மயக்க நிலைக்குச் சென்றதும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மீண்டும் அதே ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்று வழக்கம்போல் தன் கடையில் படுத்துத் தூங்கியுள்ளான். எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இன்றி அவன் நடந்துகொண்ட விதம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

   

ஆரம்பத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளை அந்த நபர் மறுத்தபோதிலும், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தலைமுடி சாட்சியத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவனை மடக்கிப் பிடித்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு அவன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான். தற்போது இச்சம்பவம் தொடர்பாக கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.