பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் படிப்பாதையில் வாலிபர் ஒருவர் தனது மனைவியைக் கையில் தூக்கிக்கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மலையேறிச் செல்ல வின்ச் மற்றும் ரோப் கார் வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான பக்தர்கள் நேர்த்திக்கடனாகப் படிப்பாதையையே பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட புனிதமான பாதையில், மற்ற பக்தர்களின் வருகையைப் பொருட்படுத்தாமல் இந்தத் தம்பதியினர் சினிமா பாடலைப் பின்னணியில் ஒலிக்கவிட்டு வீடியோ எடுத்துள்ளனர்.
பொதுவாகத் தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மீகத் தலங்களில் வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் சிலர் அதனைப் பெரிதாக மதிப்பதே இல்லை. குறிப்பாகப் பழனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகையச் சூழலில், சட்டதிட்டங்களை மீறிப் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் இந்தத் தம்பதியினர் நடந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது.
தற்போது இந்த அத்துமீறல் குறித்துக் கோவில் நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சுகன்யா’ என்ற பெயரில் பதிவேற்றப்பட்ட இந்த வைரல் வீடியோவை, அங்குள்ள தடை உத்தரவையும் மீறிப் படிப்பாதையில் வைத்துப் படம் பிடித்தது யார் என்பது குறித்துப் போலீசார் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…