“10 வருடக் காதல் திருமணம்… “2 குழந்தைகளுக்கு தாயான மனைவியின் கழுத்தை அறுத்து…” டீ தூள் வாங்க சென்ற இடத்தில் நடந்த கொடூரம்… பகீர் பின்னணி…!!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் சத்ரபூர் மாவட்டம் அமல்தாஸ் காலனி பகுதியில், சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த இரண்டே நாட்களில், லக்கன் ஜோஷி எனும் நபர் தனது மனைவி ஜோதி சௌராசியாவின் (28) கழுத்தை நடுரோட்டில் வைத்து கொடூரமாக அறுத்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியருக்கு 4 மற்றும் 6 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதியின் தந்தைக்குச் சொந்தமான நிலத்தைத் தனது பெயருக்கு எழுதித் தருமாறு லக்கன் ஜோஷி தொடர்ச்சியாக ஜோதியையும் அவரது பெற்றோரையும் அடித்துச் சித்திரவதை செய்து வந்துள்ளார். இதுதொடர்பான வன்முறை வழக்கில் லக்கன் சிறைக்குச் சென்று, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே பிணையில் வெளியே வந்துள்ளார்.

   

இந்நிலையில், சனிக்கிழமை கடைக்கு டீ தூள் வாங்கச் சென்ற ஜோதியை, தனது நண்பனுடன் சேர்ந்து நடுரோட்டில் மறித்த லக்கன் ஜோஷி, அவரை கீழே தள்ளி அமர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இத்தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா பகுதியில் தலைமறைவாக இருந்த லக்கன் ஜோஷி மற்றும் அவரது உதவியாளரை மத்திய பிரதேச போலிஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.