சங்காரெட்டி மாவட்டம், நாகல்கித்தா மண்டலம், ஈராக்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சையத் முல்தான் மற்றும் இர்பானா தம்பதியரிடையே இடையே சில காலமாக குடும்பத் தகராறு நிலவி வந்தது. இதன் காரணமாக, இர்பானா கடந்த 6 மாதங்களாகத் தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார்.
சமீபத்தில் கிராமப் பெரியோர்களின் தலையீட்டையும் அறிவுரையையும் ஏற்று, இர்பானா மீண்டும் கணவருடன் வாழத் தொடங்கினார். இருப்பினும், அவர் திரும்பி வந்த ஒரே வாரத்தில் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சையத், கத்தியால் தாக்கி இர்பானாவைக் கொலை செய்தார்.
கொலைக்குப் பிறகு, இர்பானாவின் உடலை அருகில் உள்ள ஒரு தர்கா அருகே வீசிவிட்டு, சையத் நேரடியாகக் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
