“மட்டன் வேகவே இல்லை” நண்பனின் முன் மனைவியை கேவலமாக திட்டிய கணவர்… மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

By Soundarya on சித்திரை 19, 2026

Spread the love

யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்போது மட்டன் சமைக்குமாறு தனது மனைவி சேத்தனாவிடம் (33) கூறியுள்ளார். சேத்தனாவும் மட்டன் சமைத்து பரிமாறினார். ஆனால், அந்த மட்டன் சரியாக வேகவில்லை என்று கூறப்படுகிறது. உணவைச் சாப்பிட்ட மனோஜ், தனது நண்பரின் முன்னிலையிலேயே மனைவியைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே மனோஜ் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்பவர் என்றும் கூறப்படுகிறது. அன்று நண்பர் முன்னிலையில் கணவன் தன்னை இழிவாகப் பேசியதால் மிகுந்த மனவேதனை அடைந்த சேத்தனா, ஆத்திரத்தில் விஷம் குடித்தார். பின்னர் தான் விஷம் குடித்த தகவலைக் கணவரிடம் கூறியுள்ளார். உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

   

இந்தச் சம்பவம் குறித்து சேத்தனாவின் மாமா அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக மனோஜ் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு சிறிய சமையல் குறைபாட்டிற்காகத் தனது மனைவியைப் பிறர் முன்னிலையில் காயப்படுத்திய கணவனின் செயலால் ஒரு உயிர் பறிபோயிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.