“என் சாவுக்கு மனைவி தான் காரணம்” சுவரில் இருந்த மரண வாக்குமூலம்… தூக்கில் தொங்கிய கணவர்..!!

By Soundarya on ஆடி 3, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூர் போய் சேர்ந்தவர் மல்லேஷ் (34) இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. மல்லேஷ் சொந்தமாக தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். இந்த நிலையில் தம்பதிகளுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல சம்பவத்தன்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது  சமபவத்தன்று இரவு தன்னுடைய வீட்டில் மல்லேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மல்லேசின்  உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது படுக்கையறை சுவரில் “தன்னுடைய சாவுக்கு மனைவி லட்சுமி தான் காரணம். அவர் கொடுத்த தொல்லையை” என்று எழுதியிருந்தார். ஆனால் லட்சுமி எதற்காக தொல்லை கொடுத்தார்? என்ற தகவல் தெரியவில்லை. அதே நேரத்தில் தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு மல்லேஷ் சண்டை போட்டதாக லட்சுமி கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் லட்சுமியை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.