“அடப்பாவி மனுஷா”… தலையை வெட்டி மனைவியை 17 பாகங்களாக கூறு போட்ட கணவன்… குலை நடுங்க வைக்கும் கொடூர சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 7, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவியை கொன்று அவரது உடலை 17 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய கணவன் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 முதல் 28 வயதுடைய கொலை செய்யப்பட்ட பெண்ணின் துண்டிக்கப்பட்ட தடை இட்கா சாலை குடிசை மற்றும் இறைச்சிக்கூடம் பகுதிக்கு அருகில் கிடந்துள்ளது. இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தாஹா என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணையில் அவர் தொடர்ந்து முரண்பாடான வாக்குமூலங்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கொலைக்கான உண்மை காரணம் கண்டறியப்பட முடியவில்லை.

தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்திய போது, தாகா தன்னுடைய மனைவி பர்வீனை கொலை செய்ததாகவும் அவரது உடல் பாகங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் வீசியதாகவும் ஒப்புக்கொண்டு உள்ளார். மனைவியின் உடலை 17 துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தியதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். பர்வினியின் தாயார் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். தன்னுடைய மகளின் தொலைபேசி இரண்டு நாட்களாக அனைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மருமகனுக்கு பலமுறை அழைத்தும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

   

இந்நிலையில் தான் காவல்துறையினரால் மீட்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலையின் புகைப்படத்தை பர்வீன் தாயாரிடம் காட்டியுள்ளனர். அது தன்னுடைய மகளின் தலை என அவர் அடையாளம் காட்டிய நிலையில் பிறகு போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர். குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அடிக்கடி கணவன் மனைவி இருவரும் சண்டை போடும் நிலையில் இது போன்ற ஒரு சூழலில் தான் தன் மனைவியை அவர் கொன்றிருக்க வேண்டும் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.