தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (27). இவர் திருப்பூரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரும் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்தனர்.
சரவணக்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து, தனது கர்ப்பிணி மனைவியை வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்தி அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சரவணக்குமார், தான் காதலித்துக் கரம் பிடித்த மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளார்.
கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த பிறகு, சரவணக்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். திருமணமான நான்கே மாதங்களில் காதல் மனைவி அடித்துக் கொல்லப்பட்டதும், கணவன் தற்கொலை செய்து கொண்டதும் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
