தற்போது இருக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது தலையில் இருக்கக்கூடிய பேன் தொல்லை தான். இது ஒரு சாதாரண விஷயம் தான். இதற்கு யாரும் பயப்பட வேண்டாம். ஆனால் அளவுக்கு அதிகமான பேன்கள் தலையில் இருந்தால் அது கடித்துக் கடித்து தலையில் காயங்களை உண்டாக்கும். இதனால் தலையை பார்ப்பதற்கே நமக்கும் அருவருப்பாக இருக்கும். அரிப்பு ஏற்படும் சமயத்தில் நம் கைகள் தலையை சொரிந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் நாம் தலையை சுத்தமாக பராமரிக்காதது தான். பலரும் பேன் தொல்லையை விரட்டுவதற்கு பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கு வீட்டில் இருக்கும் பூண்டு மட்டும் போதும். அதனை வைத்து தலையில் உள்ள பேனை எளிதில் விரட்டி விடலாம்.
அதற்கு வீட்டில் இருக்கும் வேப்பிலை எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு எப்போதும் போல ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரத்திற்கு மூன்று முறை இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பேன் தொல்லைக்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும்.
பேன் தொல்லை அதிகமாக இருந்தால் வேப்பிலையை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம். வாரத்திற்கு இதனை இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இரவில் நீங்கள் தூங்கும் தலையணை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகளை பரப்பி அதன் மேல் ஒரு துணியை போட்டு உறங்கினால் பேன் தொல்லை முற்றிலும் இல்லாமல் போகும்.
பேன்களுக்கு பூண்டு வாசனை அறவே பிடிக்காது. எனவே பூண்டை அரைத்து அதை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் வைத்து பிறகு எப்பவும் போல ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இப்படி செய்தால் பேன் தொல்லை ஒழிந்து விடும்.
