ஐயோ பாவம்… வேலைக்கு சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்… அதிவேகமாக வந்த பைக் மோதி கோர விபத்து… இளைஞர் துடிதுடித்து பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on ஐப்பசி 4, 2026

Spread the love

தேவநஹள்ளி தாலுகா சீமாச்சனஹள்ளி கிராமம் அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 25 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் சிட்லகட்டா தாலுகாவில் உள்ள அப்பேகவுடனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த அமர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அமர் வெள்ளிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, சென்னராயபட்டணா-பாலேபுரா சாலையில் எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவரது வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் இரு வாகனங்களும் பலத்த சேதமடைந்தன.

   

விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு இருசக்கர வாகன ஓட்டிக்கு கைகள் மற்றும் கால்களில் தீவிர காயம் ஏற்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சென்னராயபட்டணா காவல்துறையினர் விபத்து குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.