சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செய்யப்பட்ட கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித் என்ற இளைஞர் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆறு காவலர்களை மாவட்ட எஸ்பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மதுரை ஹைகோர்ட் கிளை அமர்வில் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றதில், “உயிரிழந்த இளைஞர் என்ன பயங்கரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினாரா? என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆயுதம் ஏந்தி தாக்கினால் தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவது ஏற்கலாம் என்று கூறியுள்ளனர்.
மேலும் சாதாரண சந்தேக வழக்கில் விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன் என்று தெரியவில்லை? என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். சட்டவிரோத காவல் மரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் கடந்த நான்கு வருடங்களில் 24 காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.
