அமைச்சரான கணவரை… கண்கள் கலங்க… ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த மனைவி… தீயாய் பரவும் வீடியோ இதோ…

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானவுடன் அவரது மனைவி அவரை கட்டியணைத்து வாழ்த்து கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘பராசக்தி’ திரைப்படத்தில் தன் பேனா முனையில் திரை உலகத்தை புரட்டி போட்ட கருணாநிதியின் பேரன் என்ற அடை மொழியோடு திரையுலகில் கால் பதித்தவர் உதயநிதி ஸ்டாலின். இவர் விஜய் நடித்த ‘ குருவி’ திரைப்படம் இவரை தயாரிப்பாளராகவும், ‘ விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படம் இவரை விநியோகஸ்தராகவும் அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார் . தற்பொழுது அவர் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டா.ர் அவருக்கு தமிழக ஆளுநராக ஆர் என் ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய பிரமாணமும் செய்து வைத்தார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை தொடர்ந்து அவருக்கு பலரும்  வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் மக்களுக்கு வாக்களித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் அவரது கடைசி திரைப்படம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு தனது குடும்பத்தினரை கட்டி அணைத்து வாழ்த்து பெற்றார்.

அப்பொழுது உதயநிதியின் மனைவியான கிருத்திகா கண்கள் கலங்க தனது கணவரை ஆரத் தழுவி வாழ்த்து தெரிவித்தார். நடிகர் உதயநிதி ஸ்டாலினும் கிருத்திகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…