பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் தன் அடுத்த படத்தை துவங்கி விட்டார். நாயகன் படத்திற்கு பின் மீண்டும் கமலுடன் இணைந்துள்ள மணிரத்னம் இந்த படத்திற்கு தக் லைஃப் என பெயர் வைத்துள்ளார். த்ரிஷா, ஜெயம் ரவி என இதில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
தக் லைஃப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் துல்கர் சல்மான் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் எதோ சில காரணங்களால் இவர் வெளியேற ஜெயம் ரவி படத்திற்குள் வந்தார். இந்தநிலையில் ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து தற்போது விலகியுள்ளார். என்ன தான் பிரச்சனை, ஏன் இப்படி ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர் என பெரிய குழப்பம் நிலவியது.
இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, துல்கர் சல்மான் வெளியேறவில்லை, வெளியேற்ற பட்டுள்ளார் என்பதே உண்மை. துல்கர் தற்போது பிசியாக நடித்து வருகிறார். அப்படி இருந்தும் மணிரத்னம் படம் என்பதாலும், கமல் நடிக்கிறார் என்பதாலும் தான் இந்த படத்திற்கு டேட்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் இவர் கொடுத்த அனைத்து டேட்களும் வீணடிக்கப்பட்டுள்ளது.
வேறு வேறு டேட்ஸ் கேட்டிருக்கிறார்கள், கமலுக்கு எப்போது சரியாக இருக்குமோ அப்போதுதான் ஷூட்டிங்கே வைக்கிறார்கள். துல்கர் கையிலோ வேற டேட்ஸ் இல்லை, அதனால் ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்துள்ளது. மணிரத்னம் ஆபிஸில் உள்ளவர்கள் துல்கரை இழிவாக பேசியுள்ளனர். அதுமட்டுமல்ல இது துல்கருக்கு தெரிந்து விட்டது. மணிரத்னம் போன் செய்த போது துல்கர் போனை எடுக்கவில்லை. இதனால் ஒரு ஈகோ பிரச்சனை வந்துள்ளது.
இதன்பின்னரே துல்கர் இந்தப்படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அதன்பின் தான் ஜெயம் ரவியை புக் செய்து உள்ளார்கள், ஆனால் மணிரத்னம் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்க, இப்போது ஜெயம் ரவியும் வெளியேறிவிட்டார். ஈகோ பிரச்சனைகளால் தயாரிப்பாளர்கள் தான் கஷ்டத்தில் செல்கிறார்கள் என கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு.