அது ஒரு கனா காலம்… 90s கிட்ஸ்கள் ரசித்து பார்த்த Favourite தொகுப்பாளர்கள் இவங்கதான்…

By Meena on ஜனவரி 11, 2025

Spread the love

90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கை கனவு போன்றது. எந்த ஒரு தொழில்நுட்பமும் இல்லாமல் தாத்தா பாட்டி நண்பர்கள் என தெருவில் விளையாடி சுற்றி தெரிந்து வளர்ந்தவர்கள். 90ஸ் கிட்ஸ்களின் ஒவ்வொரு தருணங்களும் என்றைக்கும் மறக்க முடியாததாக இருக்கிறது. அப்படி 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்தமான Favourite தொகுப்பாளர்கள் யார் யார் என்பதை பற்றி இனி காண்போம்.

1. அப்துல் ஹமீத்: அப்துல் ஹமீத் பாட்டுக்கு பாட்டு என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். ஞாயிற்றுக்கிழமை வந்தாலே இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி எல்லார் வீடுகளிலும் கட்டாயம் ஓடும். புது பட பாடல்கள் பழைய பாடல்கள் என இந்த நிகழ்ச்சி கேட்பவரின் மனதை இலகுவாக்கும். இவரின் தனித்துவமான குரலினால் பிரபலமானார்.

   

   

2. உமா: பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை நடத்தியவர் தான் உமா. இந்த நிகழ்ச்சியை நடத்தியதால் இவரை பெப்சி உமா என்றே அழைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை இவர் மிகவும் அழகாக சிரித்த முகத்துடன் நடத்துவார். இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளம் அந்த நேரத்தில் இருந்தது.

 

3. விஜய சாரதி: நீங்கள் கேட்ட பாடல் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் விஜயசாரதி. இவர் பல பல இடங்களுக்கு சென்று அங்கிருக்கும் மக்களை சந்தித்து உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டு பேசுவார். அவர் பேசும் விதமும் ஒவ்வொரு இடத்துக்கு போவதையும் காண 90ஸ் கிட்ஸ்க்கு மிகவும் ஆவலாக இருக்கும்.

4. அனுஹாசன்: காபி வித் அனு என் நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொகுத்து வழங்கியவர் அனுஹாசன். இவரது நிகழ்ச்சியில் பல திரை பிரபலங்கள் வந்து பேசுவார்கள். இவருக்கு அடுத்ததாக தான் காபி வித் டிடி என்று திவ்யதர்ஷினி தொடர்ந்து தொகுத்து வழங்கினார். இவர் கேள்வி கேட்கும் விதமும் பிரபலங்களுடன் பேசும் விதமும் பார்ப்போரை ஆர்வமுடன் கேட்க வைக்கும்.

5. சொர்ணமால்யா: இளமை புதுமை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சொர்ணமால்யா. இவருக்கு மிக நீளமான முடி இருக்கும். அதனாலே பிரபலமானவர் சொர்ணமால்யா. 90ஸ் கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர்.

 

6. அர்ச்சனா: காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. இப்போது போலவே அப்போதும் அர்ச்சனா மிகவும் காமெடியாக படபடவென்று பேசக்கூடியவர். அதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.

7. சுரேஷ்குமார்: டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சுரேஷ்குமார். ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டாலே புது படங்கள் எந்த படம் தரவரிசையில் முதல் மூன்று இடத்தை பிடித்திருக்கிறது என்பதை காண எல்லாருக்கும் ஆவலாக இருக்கும். இவரது நிகழ்ச்சி எப்போது வரும் என்று காத்திருந்து பார்ப்பவர்கள் பலர். அப்படி இவர் பேசும் விதம் இவரது குரல் எல்லாமே கவரும் வகையில் இருக்கும்.

8. ரத்னா: திரைவிமர்சனம் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி அளவில் இவர் கூறும் திரைவிமர்சனத்திற்கு காத்திருப்பவர்கள் பலர். இவர் என்ன கூறுகிறார் என்று கேட்டுவிட்டே படத்திற்கு செல்பவர்களும் இருந்தார்கள். ஏன்னென்றால் அப்போது படத்தின் ரெவியூ சொல்ல இவரை தவிர வேறு யாரும் இருந்ததில்லை. வரும் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் ஃபேவரைட் ஆன தொகுப்பாளர் ஆவார்.