பணத்தை சேமிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவு சேமித்த பணத்தை பன்மடங்காக பெருக்குவது முக்கியம். அப்படி மக்கள் சேமித்த படத்தை பெருக்குவதற்கு ஒன்று டேர்ம் டெபாசிட்டில் முதலீடு செய்வார்கள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் இன்சூரன்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள். சமீபத்திய காலங்களில் SIP மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. இதில் என்னதான் ரிஸ்க்கள் இருந்தாலும் முதலீடுகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த SIP முதலீட்டில் நடுத்தர வர்க்கத்தினரும் ரூபாய் 500 முதல் முதலீடு செய்யலாம். இதில் அதிகப்படியான லாபத்தை எடுக்க எந்த மாதிரி முதலீடு செய்ய வேண்டும் போன்றவற்றை இனி காண்போம்.
பல பாரம்பரிய முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது SIP முதலீடு சிறந்த வருமானத்தை கொடுக்கின்றது. இந்த SIP இல் ஒரு சிறிய தொகையுடன் நீங்கள் முதலீடு செய்ய தொடங்கலாம். உங்கள் வருமானம் காலப்போக்கில் அதிகரிக்கும் போது முதலீட்டை படிப்படியாக அதிகரிக்கலாம். உங்கள் வசதிக்கேற்ப மாதாந்திர காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் முதலீடு செய்யலாம். நிதி நெருக்கடியின் போது உங்கள் முதலீட்டை தற்காலிகமாக நிறுத்தும் வாய்ப்பு இதில் இருக்கிறது. இதி்ன் நெகிழ்வு தன்மை காரணமாக SIP முதலீடு மிகவும் எளிமையான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது.
SIP முதலீட்டில் உங்களுக்கு கூட்டு வட்டியின் பலனை அளிக்கிறது. காலப்போக்கில் நீங்கள் ஆயிரத்தில் முதலீடு செய்யும் போது கூட 12 சதவீதம் முதல் 15 சதவீதம் ஆண்டு வருமானத்தை வழங்குகிறது. நீண்ட காலத்திற்கு SIP முதலீடு செய்யும்போது நீங்கள் நினைக்க முடியாத பெரிய அளவிலான பணத்தை உங்களால் சேமிக்க இயலும். நீங்கள் SIP முதலீடு செய்வதற்கு முன்பு உங்களது வருமானம் செலவுகள் நிதி இலக்குகளை கண்டறிந்து செய்யுங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானம் அதிகரிப்பது போலவே ஒவ்வொரு வருடமும் SIP முதலீட்டு தொகையை அதிகரிப்பது புத்திசாலித்தனம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் Step up SIP விருப்பத்தை தேர்வு செய்யலாம். SIP வருமானத்தை அதிகரிக்க பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். SIPல் நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது. சந்தை உயரும் போது உங்கள் சராசரி முதலீட்டில் சிறந்த வருமானம் ஈட்ட முடியும்.
என்னதான் பல வழிமுறைகளை கையாண்டாலும் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் SIP என்பது சந்தை அபாயத்திற்கு உட்பட்டது தான். அதனால் உங்கள் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் முதலீடு செய்யும் முன்பு இதன் ரிஸ்குகளை நன்றாக தெரிந்து கொண்டு நிபுணர்களின் ஆலோசனை பெற்று முதலீடு செய்தால் உங்களிடம் இருக்கும் ஆயிரங்களை கோடிக்கணக்கானவும் மாற்ற முடியும் என்பது சாத்தியம்தான்.