சிசிஎல் எனப்படும் செலிப்ரட்டி கிரிக்கெட் லீக்கின் 9வது சீசன் பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கியது.
சென்னை ரைனோஸ், கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ், கர்நாடகா புல்டோசர், பெங்கால் டைகர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், போஜ்புரி தபாக்ஸ், பஞ்சாப் டி ஷேர் என்று மொத்தம் எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளன.
ஒட்டுமொத்த நட்சத்திரங்களை ஒன்றிணைக்கும் ஒரு கிரிக்கெட் தொடர் தான் இந்த CCL. இந்த தொடரில் மொத்தம் 16 போட்டிகள் நடைபெறும்.
அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அரை இறுதி போட்டிக்குள் நுழையும்.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தொடங்கிய இதன் இறுதிப்போட்டி வருகின்ற மார்ச் 19ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
புள்ளி பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகள் முதல் அரை இறுதி போட்டியிலும்,இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள அணிகள் இரண்டாவது அரையிறுதி போட்டியிலும் மோதுகின்றன.
இரு அரை இறுதி போட்டிகளும் வருகின்ற மார்ச் 18ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில் கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை ரைனோஸ் அணி, 2012 ஆம் ஆண்டு சென்னை அணி, 2013 ஆம் ஆண்டு கர்நாடகா புல்டோசர், 2014 ஆம் ஆண்டு கர்நாடகா, 2015 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர், 2016 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர்ஸ், 2017 ஆம் ஆண்டு தெலுங்கு வாரியர், 2019 ஆம் ஆண்டு மும்பை ஹீரோஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
அதன் பிறகு மூன்று வருடங்களாக இந்த போட்டி நடைபெறாமல் இருந்தது
இந்த நிலையில் தற்போது மூன்று வருடங்களுக்குப் பிறகு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்நடைபெறுவதால் நட்சத்திரங்கள் ஆர்வமாகவும் மிகுந்த உற்சாகத்திலும் இருந்து வருகின்றன.
இந்த அணிகளின் கேப்டன் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ரைனோஸ் – ஆர்யா
கேரளா ஸ்டிரைக்கர்ஸ் – குஞ்சாகோ போபன்
கர்நாடகா புல்டோசர்ஸ் – சுதீப்
தெலுங்கு வாரியர்ஸ் – அக்கில் அக்கினேனி
பெங்கால் டைகர்ஸ் – ஜிஸ்ஷூ
மும்பை ஹீரோஸ் – ரித்தேஷ் தேஷ்முக்
போஜ்புரி தாபங்ஸ் – மனோஜ் திவாரி
பஞ்சாப் டி ஷெர் – சோனு சூட்
சென்னை ரைனோஸ்
ஆர்யா, விஷ்ணு விஷால், ஜீவா, விக்ராந்த், சாந்தனு, பிருதிவி, அசோக் செல்வன், கலை அரசன், மிர்ச்சி சிவா, பரத் நிவாஸ், ரமணா, சத்யா, தசரதன், சரண், ஆதவ், பாலசரவணன்.