காலையில் எழுந்தவுடன் நம்முடைய உடலுக்கு உற்சாகத்தை கொடுப்பது நல்லது. பொதுவாக நாம் காலியில் எழுந்ததும் டீ தான் குடிப்போம். டீ குடிப்பது நல்லது தான் ஆனால் அதைவிட மூலிகை கலந்த சாறுகளை குடிப்பது அதைவிட நல்லது. அந்தவகையில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் கலந்த மஞ்சள் தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு. இதை ஒரு வீட்டு வைத்தியமாக கூட நாம் பின்பற்றி வரலாம். நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. மஞ்சள் உடலில் இருக்கும் வீக்கத்தை குறைத்து நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது.
இந்த இரண்டும் ஒன்றாக சேர்த்து குடிக்கும்போது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. நெல்லிக்காய் கலந்த மஞ்சள் நீரை குடிப்பதால் உடலில் செரிமான அமைப்பு சீராக செயல்படுகிறது. நெல்லிக்காயில் நார்ச்சத்து, விட்டமின் சி உள்ளது. இது இரைப்பைச் சாற்றை சமநிலைப்படுத்தி அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. மஞ்சள் வீக்கத்தை குறைத்து குடல் சுத்தம் செய்ய உதவுகிறது. நாள்பட்ட மலச்சிக்கல் , அஜீரணத்தால் போராடுபவர்களுக்கு இது ஒரு பயனுள்ள வீட்டு வைத்தியம் .
காலையில் எழுந்து இதனை குடிக்கும் பொழுது உடலில் சளி மற்றும் இருமல் போன்ற பொதுவான பிரச்சினைகளை தடுக்கிறது. மாறிவரும் வானிலையில் தொற்று நோய்க்கான ஆபத்து அதிகரிக்கும் போது இந்த மூலிகை சாறு ஒரு இயற்கையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது. முகத்தில் புள்ளிகள், பருக்கள் உள்ளவர்களுக்கு நெல்லிக்காய் மஞ்சள் கலந்த பானம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். நெல்லிக்காய் ரத்தத்தை சுத்திகரிக்கும். மஞ்சள் தோல் அலர்ஜியை குறைக்கிறது.
