“ஐயோ அந்த பச்ச புள்ள என்ன பாவம் பண்ணுச்சு” பூட்டிய அறைக்குள் கண்ட கோலம்… ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

By Soundarya on தை 8, 2026

Spread the love

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அம்பலக்காவு பகுதியைச் சேர்ந்த மோகித் என்பவர் தனியார் நிறுவன ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷில்பா (30) மற்றும் மகன் அக்ஷய் அஜித் ஆகியோருடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இரவு ஷில்பா தனது மகனுடன் ஒரு அறையிலும், மோகித்தின் தாய் மற்றொரு அறையிலும் உறங்கியுள்ளனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் ஷில்பா அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த மோகித், கதவைத் தட்டியும் பதிலில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, மகன் அக்ஷய் கட்டிலில் சடலமாகக் கிடக்க, ஷில்பா தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று இருவரின் உடல்களையும் மீட்டனர். முதற்கட்ட விசாரணையில், ஷில்பா தனது மகனைக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஷில்பா எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார்? மற்றும் மகனை எப்படிக் கொலை செய்தார்? என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.