“போரை நிறுத்தச் சொன்ன டிரம்ப்…” 5 கோடி உயிர்களைக் காப்பாற்றினேனா?… இந்தியா-பாகிஸ்தான் போர்… அமெரிக்க அதிபர் சர்ச்சை பேட்டி… மறுக்கும் இந்தியா… பின்னணி விவரம்…!

By Visaka on ஆவணி 1, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கேம்ப் டேவிட் பகுதியில் ஊடகங்களிடம் பேசியபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கடந்த ஆண்டு நடைபெற்ற தீவிர மோதலின் போது 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது மிரட்டல் காரணமாகவே அந்தப் போர் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் போரை நிறுத்தத் தவறினால் கடுமையான சுங்கவரி விதிக்கப்படும் என்று தான் எச்சரித்ததாகவும், இதன் மூலம் ஐந்து கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாத் ஷெரிப் தன்னிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், டிரம்பின் இந்த வாதங்களை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்து நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநரும் (DGMO) இந்திய அதிகாரியும் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர்தான் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இந்தியா தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறது. இதில் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் தலையீடும் இருக்கவில்லை என்பதே இந்தியாவின் உறுதியான நிலைப்பாாடாகும்.

   

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்து’ நடவடிக்கையைத் தொடங்கியது. பாகிஸ்தானின் தொடர்ச்சியான கோரிக்கைகளை ஏற்று மே 10 ஆம் தேதி இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், டிரம்பின் இந்த தன்னிச்சையான கருத்துக்கள் சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளன.