‘குக் வித் கோமாளி’ காளையனின் இளம் வயது புகைப்படத்தை பார்த்திருக்கீங்களா?… பாடி பில்டர் போல இருக்காரே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும். கொரோனா லாக் டவுன் சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக வனிதா விஜயகுமாரும், கனியும், ஸ்ருதிகாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்த சீசனில் சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்து ஆகியோர் கோமாளிகளாக களமிறங்கி உள்ளனர். இந்த சீசனில் குக்காக ராஜ் ஐயப்பா, ஷெரின், நடிகை விசித்ரா,இயக்குனர் கிஷோர், சீரியல் நடிகர் விஜே விஷால் மற்றும் சிவாங்கி போன்றோர் களமிறங்கி கலக்கி வருகின்றனர்.
சென்ற வாரம் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர் தான் காளையன். இவர் பல திரைப்படங்களில், துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர்.இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, ஜி பி முத்து போன்றோரை அடிப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த காமெடியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்பொழுது இவர் 10 வருடத்திற்கு முன் தான் சற்று ஒல்லியாக இருந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ‘குக் வித் கோமாளி’ காளையனா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர்.