‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரேஷ்மாவின் வீட்டை பார்த்திருக்கீங்களா?… இவ்வளவு பெரிய வீடா?… அவரே வெளியிட்ட வீடியோ இதோ…

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரேஷ்மாவின் வீட்டை பார்த்திருக்கீங்களா?… இவ்வளவு பெரிய வீடா?… அவரே வெளியிட்ட வீடியோ இதோ…

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையான ரேஷ்மாவின் ஹோம் டூர் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து திரைக்கு வராத கதை, வணக்கம் டா மாப்ள போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார்.

 

இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இவர் பிக் பாஸ் வீட்டில் 40 நாட்கள் வரை தாக்குப் பிடித்தார். இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவர் அபி டெய்லர் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை ரேஷ்மா சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

 

இந்நிலையில் தனது ஹோம் டூர் வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதில் முதலில் ஹாலை சுற்றிக்காட்டுகிறார் ரேஷ்மா. இதில் புத்தர் மற்றும் சாய்பாபா என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறுகிறார். வீட்டில் உள்ள ஒரு சிறிய பூஜை அறையையும், தனது சமையலறையும் காட்டுகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது நிறைய சமைத்ததாகவும் தற்போது சமைக்க நேரமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகை ரேஷ்மா யூடியூப் சேனல் ஒன்றை ஒரு வருடத்திற்கு முன்னர் தொடங்கினார். இவரின் youtube சேனலின் பெயர் ரேஷ்மா டாக்கிஸ். தற்பொழுது இந்த சேனலில் தான் இவர் தனது ஹோம்டூர் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ….

Begam