‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் அழகான குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ!…

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் அழகான குடும்பத்தை பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் குடும்ப புகைப்படம் இதோ!…

நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்பப் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாக்கிக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பம், குடும்ப ஒற்றுமை, குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், விட்டுக் கொடுத்தல் என பல விஷயங்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்டி வருகிறது.

இல்லத்தரசிகளின் மிக விருப்பமான சீரியல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் தங்களுக்கு சொந்த வீட்டை இழந்துள்ளனர். இதற்குக் காரணம் மீனாவின் தந்தை. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த எபிசோடில் மீனா தங்கையின் நிச்சயதார்த்தத்திற்கு சென்று அவமானப்பட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் திரும்பி உள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது தந்தையை திட்டியுள்ளார் மீனா. தற்போது இந்த சீரியல் பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொள்பவர் நடிகை சுஜிதா. இவர் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார்.

இவர் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலமான நடிகை ஆவார். இந்நிலையில் நடிகை சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் தற்பொழுது வைரல்ஆக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam