‘அம்மா நீ மட்டும் தான் என் குழந்தை!’… என்று அழுத பிக் பாஸ் ரக்ஷிதாவின் அம்மாவை பார்த்து இருக்கீங்களா?… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ!…

‘அம்மா நீ மட்டும் தான் என் குழந்தை!’… என்று அழுத பிக் பாஸ் ரக்ஷிதாவின் அம்மாவை பார்த்து இருக்கீங்களா?… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ!…

சீரியல் நடிகை ரக்ஷிதா தனது அம்மா மற்றும் அப்பாவுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூரை சேர்ந்த நடிகை ரக்ஷிதா கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவரும் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்துள்ளனர். தொடர்ந்து இவர்கள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘சொல்ல மறந்த கதை’ என்ற சீரியலும் கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதற்கிடையே அவரது கணவர் தினேஷுக்கு சீரியலில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாகவும், இதனால் ரக்ஷிதா மற்றும் தினேஷிற்கு இடையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டது. தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளி வந்தன.

இந்நிலையில் நடிகை ரக்ஷிதா தற்பொழுது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் இந்நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னால் தனது அம்மாவை நினைத்து கதறி அழுது கடிதம் ஒன்றை எழுதினார். ‘எனக்கு இனிமேல் குழந்தை பாக்கியம் இருக்கிறதா? என்று தெரியவில்லை. அம்மா நீ தான் எனக்கு குழந்தை’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

அப்படி ரக்ஷிதா எமோஷனலாக குறிப்பிட்ட அவரது அம்மாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ரக்ஷிதா அம்மா மற்றும் அப்பா உடன் இணைந்து காணப்படுகிறார்.

இதோ அவர்களின் புகைப்படம்….

Begam