நடிகர் விக்ராந்தின் மனைவியை பார்த்திருக்கீங்களா?… என்னது! இவர் ஒரு பிரபல சீரியல் நடிகையா?…

நடிகர் விக்ராந்தின் மனைவியை பார்த்திருக்கீங்களா?… என்னது! இவர் ஒரு பிரபல சீரியல் நடிகையா?…

நடிகர் விக்ராந்த் தனது மனைவியுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர் தளபதி விஜய். அவரது சித்தப்பா பையன் தான் நடிகர் விக்ராந்த் என நம் அனைவருக்கும் தெரியும். முதலில் விஜயின் தம்பி என பிரபலமடைந்தார். பின்னர் தன்னுடைய  கடுமையான முயற்சியினால் திரையுலகில் முன்னுக்கு வந்தார்.

இவர் நடிப்பில் வெளியான ‘கோரிபாளையம்’ திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையக அமைந்தது. இதைதொடர்ந்து அவர் முத்துக்கு முத்தாக, கெத்து, கவண் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விக்ராந்த்தின் தாயார் பிரபல சீரியல் நடிகை ஷீலா. விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் விக்ராந்த் மானசா ஹேமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளனர். நடிகர் விக்ராந்தை திருமணம் செய்து கொண்ட மானசா ஒரு பிரபல சீரியல் நடிகை என்பது நாம் அனைவரும் அறியாத ஒன்றே.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘உதிரிப்பூக்கள்’ சீரியலில் நடித்துள்ளாராம். தற்பொழுது நடிகர் விக்ராந்த் மற்றும் மானசாவின் அழகான குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்…

Begam