நடிகர் நகுலின் அழகான இரண்டு குழந்தைகளை பார்த்திருக்கீங்களா?… அடடே இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே!… வைரலாகும் புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

நடிகர் நகுல் தனது இரண்டு குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இதைத்தொடர்ந்து அவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிகராக மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் விளங்குகிறார்.

   

இவரின் நடிப்பில் தற்போது வாஸ்கோடகாமா, எரியும் கண்ணாடி போன்ற  திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவர் தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதி பாஸ்கரன் என்பவரை 2016ல்  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா  என்ற மகள் உள்ளார். சமீபத்தில் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இக்குழந்தை வீட்டிலேயே வாட்டர் பெர்த் முறை மூலம் பிறந்தது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக போல்லவெர்ஸ்களை கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் நகுல் தனது இரண்டு குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட சில அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்….