நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பார்த்திருக்கீங்களா?… இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே!… அழகான குடும்ப புகைப்படம் இதோ!…

நடிகர் ஜெயம் ரவியின் இரண்டாவது மகனை பார்த்திருக்கீங்களா?… இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே!… அழகான குடும்ப புகைப்படம் இதோ!…

நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொண்டு நடித்து வருகிறார் என்பதால் அவரது படங்களுக்கு தனியாக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இவர் அகிலன், சைரன், இறைவன் என பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இவருடைய குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது நடிகர் ஜெயம் ரவி 2009ல் ஆரத்தி என்பவரை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். ஜெயம் ரவியின் முதல் மகனை நாம் டிக் டிக் படத்தில் பார்த்திருப்போம். ஆனால் அவரது இரண்டாம் மகனை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

தற்பொழுது நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் அவரது இரண்டாம் மகனை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் ஜெயம் ரவியின் மகனா இவர்? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam