“நாங்க நினைச்சிருந்தா விஜய் வெளியவே வந்திருக்க முடியாது”… ஜனநாயகன் விவகாரத்தை லெஃப்ட் ஹாண்டில் டீல் பண்ண ஹெச்.ராஜா…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

நடிகர் விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன்  திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்காததால் இன்று வெளியாக இருந்த திரைப்படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த சில காட்சிகளுக்கு தணிக்கை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏற்கனவே சில மாற்றங்களை செய்ய சொல்லி அதை பட குழு செய்து கொடுத்தும் மறு தணிக்கை செய்ய வேண்டும், மேலும் சிலர் படம் பார்க்க வேண்டும், கால அவகாசம் தேவை என தணிக்கை வாரியத்தின் தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாக உள்ளது. ஒரு பக்கம் விஜய்க்கு நிறைய ஆதரவுகள் குவிந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி எம்பி, மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் ஏற்கனவே விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளனர். அவர்கள் அனைவரும் பாஜக விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறுகிறார்கள்.

   

இப்படியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக பிரமுகர் ஹெச். ராஜா, நாங்கள் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றால் செப்டம்பர் 27ஆம் தேதியே கொடுத்திருப்போம். மத்திய அரசு மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டது. பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் விஜய் வெளியே வந்திருக்கவே முடியாது. நாங்கள் எப்போதும் ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்க மாட்டோம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.