நவம்பர் 11 குருபகவான் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைய உள்ளார். கடக ராசியில் குரு உச்ச பலத்துடன் இருப்பதால் இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு பெரிய யோகத்தையும் நல்ல பலன்களையும் தரும் என ஜோதிடப்படி கூறப்படுகிறது. இந்த பெயர்ச்சி மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலத்தில் அதிக நன்மையை பெறக்கூடிய ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்:
உங்கள் ராசிக்கு பொருளாதார ரீதியாக நல்ல மாற்றம் மற்றும் வளர்ச்சியை காண்பீர்கள். தற்போது வரை தொழிலில் ஏற்பட்ட முடக்கங்கள் காணாமல் போகும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். நிதிநிலை, குடும்ப உறவுகள் மற்றும் வசதி வாய்ப்புகள் மேம்பட்டு உங்களுடைய கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு விரைய ஸ்தானத்தில் குரு வக்ரமாக இருப்பதால் எதிர்பாராத லாபத்தையும் வளர்ச்சிக்கான மாற்றத்தையும் நீங்கள் காண்பீர்கள். தொழில் ரீதியாக நீண்ட காலம் வராமல் இருந்த பணம் தற்போது உங்களுக்கு கிடைக்கும். மூத்த சகோதரர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திடீரென வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார ரீதியாகவும் தனிப்பட்ட விதத்திலும் மகிழ்ச்சி மற்றும் மனதிருப்தி ஏற்படக்கூடிய காலம் இது.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சி பொருளாதார ரீதியான நல்ல வளர்ச்சி மற்றும் பணவரவை கொண்டு வரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். ஏதாவது புதிய முயற்சிகள் நீங்கள் இந்த காலகட்டத்தில் மேற்கொள்ள முடியும். ஒட்டுமொத்த பணவரவு நிதிநிலை மேம்படுவது, புதிய வாய்ப்புகள் மூலம் வளர்ச்சி அடைவது ஆகியவை ஏற்படும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு ராசி அதிபதி குரு ஆவார். அதனால் பெரிய அளவுக்கு தீமைகள் வராது. உங்களுக்கு காண்பது எல்லாம் நன்மைதான். குறிப்பாக குடும்பத்தில் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த பல பிரச்சனைகள் தீர்வு கிடைக்கும். உங்கள் நெருங்கிய உறவுகளுடன் இருந்த மனக்கசப்புகள் அனைத்தும் தீரும். தொழில் மற்றும் உபயோக ரீதியாக இருந்த சிறிய சிறிய பிரச்சனைகள் எல்லாம் நீங்கி நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை 4 மாதங்களுக்கு நீங்கள் தான் அதிபதி.
பீகாரில் இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு பாடமாக இருக்கும் என அரசியல்…
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…