நயன்தாராவின் ‘கனெக்ட்’ பட பிரீமியரில் அசிங்கப்படுத்தப்பட்ட ஜி பி முத்து!…. மோசமாக நடத்திய பௌன்சர்கள்!…. பாதியில் வெளியேறிய அவலம்!….

By Begam

Published on:

சமூக வலைதள பிரபலமான ஜி பி முத்து ‘கனெக்ட்’ பட பிரிமியரில் தான் அசிங்கப்பட்டதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் ஜி பி முத்து. இவர் youtube வீடியோக்கள் மூலம் மிகவும் பிரபலமானவர். இவர் தனது youtube சேனலில் வெளியிடும்  வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதில் அவர் ரசிகர்களின் கடிதத்திற்கு தனக்கே உரித்தான பாணியில் பதில் சொல்வார். இவருக்கு சப்ஸ்க்ரைபர்கள் அதிகமாக உள்ளனர்.

   

இதைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக சென்றார். ஆனால் 20 நாட்களிலேயே தனது மகனுக்கு உடல்நிலை சரி இல்லை என்ற காரணத்தால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து அவர் தற்பொழுது திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தின் பிரிமியர் நிகழ்ச்சிக்கு ஜிபி முத்துவை அழைத்திருந்தனர். ‘நயன்தாரா உங்களுடன் படம் பார்க்க விரும்புகிறார் என சொன்னார்கள். நம்பி போனால் என்னை ஒரு மூலையில் உட்கார வைத்துவிட்டார்கள். அதன் பின் பவுன்சர்கள் என்னை மிகவும் மோசமாக நடத்தினர். தூரம் போ என துரத்தி விட்டார்கள்.’

‘பாதியில் நான் வெளியேறிவிட்டேன். அதற்கு பிறகு நயன்தாராவின் கணவர் என்னை போன் செய்து மீண்டும் வர சொன்னார். இன்னொரு நாள் பார்க்கலாம் என நான் கூறிவிட்டேன்’என ஜிபி முத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட ஜி பி முத்துவின் ரசிகர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.