மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம்… “ஜூலை 15 தமிழகம் முழுவதும்” அரசு புதிய அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 5, 2025

Spread the love

தமிழக மக்கள் பயனடையும் விதமாக ஏராளமான திட்டங்கள் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம்தான்  மகளிர் உரிமைத்தொகை திட்டம். இந்த திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என கடந்த சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.   மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களுக்கு செப்., முதல் பணம் வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.