சமீபகாலமாகவே தங்கத்தின் விலை கூடிக்கொண்டே போகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உச்சத்திற்கு போய் உள்ளது. உலகச் சந்தையில் விலை உயர்வு காரணத்தினால், இந்திய சந்தையிலும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (ஐசிஐசிஐ) வங்கி பொருளாதார ஆய்வு குழு அறிக்கையின்படி வரும் மாதங்களில் தங்கத்தின் விலை உயரும் என்று தெரிவித்துள்ளனர். 2025 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ₹99500 முதல் ₹1, 10,000 வரை இருந்தது. 2026 ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் 1,10,000 முதல் 1,25,000 வரை இருந்தது.
அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்களே தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. பொதுவாகவே இந்தியாவில் பண்டிகை காலங்களில் மற்றும் திருமண தேவைக்கு தங்கத்தின் விற்பனை அதிகரிக்கிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. இந்த ஆண்டில் மட்டும் இன்று வரை 33 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தாலும் தங்கத்தின் விலை மட்டும் குறையாது என்று எச்சரிக்கை விரித்துள்ளது. இனிவரும் காலங்களில் கட்டாயம் தங்கத்தின் விலை எண்ணி பார்க்காத அளவிற்கு உயரும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
