நடிகையும், அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான கெளதமி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டும், மக்கள் மற்றும் சமூக சேவைகளைத் தொடர்ந்து செய்வதற்கு ஏதுவான வழியைக் கண்டறியும் நோக்கத்தோடும் இந்த கனத்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட கெளதமி, குறுகிய காலத்திலேயே அக்கட்சியின் முக்கியப் பொறுப்புக்கு உயர்ந்த நிலையில், தற்போது முழுமையாக விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
