நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 10 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா கடைசியாக பாண்டியராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பு பெறவில்லை. அதை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வந்தது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யா பத்துக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாகவும், ott-யில் 20 மொழிகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
முதலில் இந்த திரைப்படத்தை தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறியிருந்தார். அதற்குப் பிறகு திடீரென்று படத்தின் தேதியை மாற்றி இருக்கிறார்கள். அதாவது அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். இதற்கான காரணம் என்ன என்று பலரும் பலவிதமாக கூறி வருகிறார்கள். அதாவது தீபாவளி பண்டிகைக்கு நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
இதனால் படத்தின் தேதியை மாற்றி இருக்கிறார்கள். கங்குவா பட குழுவினர் அது மட்டும் இல்லாமல் அக்டோபர் மாதத்தில் தான் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டி ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இதைப் பார்த்த பலரும் நடிகர் சூர்யா அஜீத்தை பார்த்து பயந்துவிட்டாரா? என்று கூறி வருகிறார்கள். மேலும் ரஜினியுடன் மோதுவதற்கு தைரியம் இருக்கும் உங்களுக்கு ஏன் அஜித்துடன் மோதுவதற்கு இல்லை என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் .
இதற்கு பதில் அளிக்கும் விதமாக வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் தெரிவித்ததாவது “நடிகர் சூர்யா எந்த நடிகரையும் பார்த்து பயப்படவில்லை. ஆனால் அந்த படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது அதிகபட்சத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் ஏகப்பட்ட மொழிகளில் வெளியாக இருப்பதால் அனைத்தையும் பார்க்கவேண்டிய சூழல் இருக்கின்றது. அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் படக் குழுவினர் இந்த தேதியை முடிவெடுத்து அதில் படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். அது தவிர வேறு எந்த காரணமும் கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார்.