Connect with us

கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடலில் மாற்றத்தை சொன்ன கங்கை அமரன்.. கவிஞரின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

CINEMA

கண்ணதாசன் எழுதிய ஹிட் பாடலில் மாற்றத்தை சொன்ன கங்கை அமரன்.. கவிஞரின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.

50 களில் முதலில் படங்களுக்கு கதை வசனம் மட்டும் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த கண்ணதாசன் 50 களின் இறுதியில் படங்களுக்கு பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவரின் பாடல்கள் அடுத்தடுத்து ஹிட்டானதால் அவர் பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினார்.

இதில் மற்ற பாடல் ஆசிரியர்களுக்கும் கண்ணதாசனுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வித்தியாசமே கண்ணதாசன் இசையமைப்பாளர் பாடல் மெட்டை சொன்னதுமே வரிகளை மழை போல கொட்டுவார் என்பதுதான். எந்தவொரு மெட்டுக்குமே அவர் வீட்டுக்கு எடுத்து சென்று பாடல் எழுதியதில்லை என்பதுதான். கண்ணதாசனின் பாடல் எழுதும் வேகத்தை இளையராஜா பல மேடைகளில் விதந்தோதி பேசியுள்ளார்.

   

அதே போல தன்னுடைய பாடல் வரிகளில் யாராவது திருத்தம் சொன்னாலும் அது சரியாக இருந்தால் எந்தவித ஈகோவும் இல்லாமல் அதை ஏற்றுக்கொள்வார் என்பதுதான். இதுபற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பாடல் ஆசிரியர் கங்கை அமரன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

 

முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற செந்தாழம் பூவில் பாடலை கண்ணதாசன் எழுதும்போது “செந்தாழம் பூவில் உக்காந்த தென்றல்” என எழுதியுள்ளார். அப்போது கம்போசிங்கில் இருந்த கங்கை அமரன் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” என மாற்றிக் கொள்ளலாமா எனக் கேட்டுள்ளார். அதைக் கேட்ட கண்ணதாசன் “ரொம்ப நல்லா இருக்கு. அப்படியே வச்சுக்கலாம்” எனக் கூறி கங்கை அமரனை பாராட்டினாராம்.

கங்கை அமரன் சில காலம் கண்ணதாசனிடம் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.  அப்போதும் தான் சொன்ன சில மாற்றங்களை கண்ணதாசன் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top