நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் முழுநேர அரசியலில் ஈடுபட்ட வருகிறார். சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். அதில் விஜய் முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் யாரோடும் கூட்டணி கிடையாது என்றும் அறிவித்துள்ளார் விஜய். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுவதால் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் கட்சிக்கு கட்சி தாவி வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தவெகவில் இருந்து சமூக செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான காந்திமதிநாதன் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து புஸ்ஸி ஆனந்திற்கு அவர் எழுதியிருக்கும்கடிதத்தில், தென் மாவட்டங்களில் மிகப்பெரிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மா.செ. பதவி வழங்காததால் அந்த சமூகத்தினுடைய வாக்குகளை தவெக கட்சியால் பெற முடியாது” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார். எனவே இதோடு தன்னுடைய அரசியல் பயணத்தை முடித்துக் கொள்வதாகவும் காந்திமதிநாதன் குறிப்பிட்டுள்ளார்
