“மொத்த உழைப்பும் வீணா போச்சே….” பற்றி எரியும் ஃபர்னிச்சர் கடைகள்… 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 4, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் மேட்சல் செக்போஸ்ட் அருகே உள்ள பிரபல ஃபர்னிச்சர் கடைகளில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. மேட்சல் செக்போஸ்ட் அருகிலுள்ள சாலையோர ஃபர்னிச்சர் கடையில் இன்று காலை திடீரெனத் தீப்பிடித்தது. மரச் சாமான்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்திருந்ததால், தீ மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து இருந்த பிற நிரந்தரக் கடைகளுக்கும் பரவி காட்டுத்தீ போலப் பற்றி எரிந்தது. இதில் கடைகளில் இருந்த கோடிக்கணக்கான மதிப்பிலான ஃபர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.